மழை வரும் போது சிலுசிலுப்பான காற்றடிக்கும். அதில் லேசான குளிரிருக்கும். மழை கொட்டும்போது அதில் நனைந்து விளையாடினால் ஒரு விளையாட்டுத்தனமான த்ரில் இருக்கும் .இந்த த்ரில் சிலிர்ப்பு எல்லாமே அந்த நிமிடத்தோடு முடிந்து விடும். சின்ன வயதிலே ஓடி பிடித்து கண்ணாம்பூச்சி விளையாடற சினேகமெல்லாம் இதைப்போல பாதிப்பை ஏற்படுத்தாத ஒன்றுதான். என்னைப்பொறுத்தவரையில் சினேகம் என்பது இதைவிட அதிகமானது.முக்கியமானது. நட்புக்கு பின்னால் பிறப்பது பரவசம். அம்மா என்று குரல் கொடுக்கும் போது அடிவயிற்றிலிருந்து பீரிட்டெழும் ஆழமான பாச உணர்வு இருக்கிறதே , என்னைப்பொறுத்தவரையில் நட்பில் ஏற்படும் உணர்வும் இது போன்றதே! நீ சந்தோஷ ப்பட்டால் அந்த பரவச உணர்வு என் மனதில் , உடலில் ஓடும் இரத்தத்தில் சூடாகப் பரவுகிறது........நீ அழுதால் அதே இரத்தம் .... எனக்குள்ளிருந்து வலியோடு பீறிடுகிறது. உன்னிடமிருந்து பிறக்கும் ஒலிக்கு என்னுள் எதிரொலி எழுவது எனக்கு புரிகிறது....... எங்கள் நட்பு வயது வரம்பையெல்லாம் மீறிய மனத்தால் ஒன்று பட்ட ஒரு நட்பு.
விடியல்
Saturday, July 30, 2011
இவன்
சிலவற்றை சிலரிடம் மட்டும் தான் பேசமுடியும். ஆனால் ....... இவனிடம் எதைப்பற்றியும் எப்போது வேண்டுமானாலும்! எனக்காக சிரிப்பதற்கு மட்டும் அல்ல, அழுவதற்கும் இவனுக்கு தெரியும்!! சோர்ந்திருக்கையில் சொடக்கு எடுப்பதற்கும், தாழ்ந்திருக்கையில் தடைகளை களைவதற்கும், தவறி நடக்கையில் இழுத்து அறைவதற்கும் இவனுக்கு மட்டுமே ஆசை இருக்கும்!!! நடக்கும் போது கால்களாகவும், தூங்கும்போது தலையணையாகவும், சோகப்படும்போது சுகமாகவும், குளிர்படும்போது கதகதப்பாகவும் உருமாற...... உருமாற இவனால் மட்டுமே இயலும்!!! என்னால் இரவுகளையும் இன்பங்களையும் இழந்து வாழ முடியும். உறவுகளையும் வரவுகளையும் மறந்து வாழ முடியும். ஆனால் ........ தோளுக்கு தோள் கொடுத்து தோல்விகளைத் துவளச் செய்யும் இவன்.... இந்த தோழன் இல்லாமல் வாழ முடியாது!!! -கௌதம்.
கவிதை
கவிதை என்பது வெறும் எழுத்தல்ல.. .கற்பனை எலும்புக்கூட்டின் ஒப்பனை சதைக்கோலம்... பொதுவாழ்க்கைத் தத்துவத்தின் போதி மரம்; பொதுவுடமைச் சமுதயத்தின் பூபாளம்; வாழ்ந்துவிட்டுப் போனவர்களின் வாய்ச்சரக்கு; வாயால் ஊதி அணைக்க முடியாத நிலா விளக்கு; கவிதை என்பது வெறும் எழுத்துக்கள் அல்ல; கவிஞன் செதுக்கிய காகித கல்வெட்டுக்கள்.
Friday, July 15, 2011
மனித நேயம்
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றில் பார்த்த ஓர் செய்தி. தமிழகத்தில் ஒரு பெரிய நகரத்தில் ஒரு மனிதனை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவன் மீது மோதிஅவனை கீழே தள்ளி பின் அங்கிருந்த கல்லையும் எடுத்து அவன் தலை மேல் போட்டு கொல்ல முயற்சித்திருக்கின்றனர். இதனை போலீஸ் கண்ட்ரோல் அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர் போலீஸ். பிறகு போலீஸ் அங்கு சென்று அந்த மனிதனை மருத்துவமனை எடுத்து சென்றிருக்கின்றனர்.அங்கு அவன் இறந்து விட்டான் என்பது லேட்டஸ்ட் செய்தி. இத்தனைக்கும் அந்த சம்பவம் நடந்தது மக்கள்நெருக்கம் நிறைந்த ஓர் ப்ரதான சாலை.பல வண்டிகள் நின்று செல்லக்கூடிய ஒரு சிக்னல் வேறு.அங்கு சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த சிலர் இதனை சினிமா படபிடிப்பு போல வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்கின்றனர். சிலர் எதையுமே கண்டுக்கொள்ளாமல் தங்கள் வழியே போய்க்கொண்டிருக்கின்றனர். என்னதான் பயம் என்றாலும்,போலீஸ் ,கேஸ் என்று தொல்லை வரும் என்று நினைத்தலும் ஒரு மனிதனை சாகும்படி அடித்துக்கொண்டிருக்கும் போது தடுக்ககூடவா தோன்றாது! சக மனிதன் என்ற உணர்வு கூடவா செத்து விட்டது மக்களுக்கு? வாய் கிழிய பேசுகிறாயே நீயாக இருந்தாலும் அந்த இடத்தில் அப்படித்தான் நடந்துக்கொண்டிருப்பாய் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. அனால் அத்தனை மனிதர்கள் நிறைந்த அந்த இடத்தில் ஒரு தைரியசாலி கூடவா இருக்கமாட்டான்?திரைப்படத்தில் மட்டும்தான் இது போன்ற காட்சியில் கூட்டத்திலிருந்து ஒரு ஹீரோ வந்து காப்பாற்றுவானா? கேள்வி மனதை குடைந்துக்கொண்டே இருக்கிறது. மனித நேயம் என்ற தலைப்பிட்டுவிட்டு மனிதனேயமற்ற செய்தியை விமர்சிக்கின்றாயே என் கிறீர்களா ? அடுத்து மனிதநேயம் மிகுந்த ஓர் செய்தி. ஹவுராவிலிருந்து டெல்லி சென்றுக்கொண்டிருந்த விரைவு ரயில் விபத்துக்குள்ளானது அனைவரும் அறிந்ததே. அப்படி விபத்து நடந்ததும் அருகில் இருந்த கிராமத்து மக்கள் ஓடி வந்து உதவி செய்ததும் அதிலும் ஓர் ஆசிரியர் அங்கு வந்து மீட்பு பணியினருடன் சேர்ந்து பலருக்கு வுதவியதும் அவர்கள் உடமைகளை தேடி அவர்களிடம் ஒப்படைத்ததும் மன நேகிழ்ச்சிக்கான செய்தியாக எனக்கு தோன்றியது. இந்த மனிதநேயம் தான் சக மனிதனிடம் நாம் எதிர்பார்ப்பது.இதுபோல சிலர் இருப்பதால்தானோ என்னவோ இன்னும் மழை பெய்துக்கொண்டிருக்கிறது!!!! பி. கு. பழைய செய்திக்கு என்ன புதிய விமர்சனம் என்று கேட்கிறீர்களா? செய்தியை விட அதிலிருக்கும் கருத்தை பாருங்கள்.
Thursday, July 7, 2011
மக்கள்தொகைகணக்கெடுப்புநாள்
ஜூலை5-மக்கள்தொகைகணக்கெடுப்புநாள்.இதுமட்டும் சரியாகத்தான் நடந்துக்கொண்டிருக்கிறது . மக்கள்தொகைகணக்கெடுப்பின்படி பார்த்தால் இந்தியாவின் மக்கள்தொகை121கோடிக்குமேல்.அதில் தமிழ்நாட்டின் மக்கட்தொகை 6கோடிக்குமேல்.இந்த ஆறு கோடிக்குமேல் உள்ளஜனத்தொகையில் 3கோடியே 14 லட்சம் பேர் ஆண்கள். மூன்றுகோடியே பத்துலட்சம் பேர்தான் பெண்கள்.இந்தநிலை1000 ஆண்களுக்கு 987பெண்கள்தான் என்னும் விகிதச்சாரத்தை தருகிறது.அதிலும் 7 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு என்ன காரணம்? பெண் சிசுக்கொலை என்பது பரவலாக பேசப்பட்டும் அதற்கான விழிப்புணர்வு அதிகரித்தும் இருக்கும் போதும் அது தடுக்கப்படவில்லை என்றுதானே தெரிகிறது! மருத்துவமனைகளில் இருக்கும் அறிவிப்புகள் கருவில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா என்று தெரிவிப்பது சட்டப்படி குற்றம் என்று சொல்கிறது.இருப்பினும் ......?? ஒரு பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்துபேசி மீண்டும் மகாபாரத கதையில் வருவதுபோல த்தான் ஐந்து ஆண்களுக்கு ஒரு பெண் என்று நகைச்சுவையாக பேசினார் ஒருவர் அதிலும் அவர் ஒரு பேராசிரியர். இது நகைச்சுவைக்கு உரிய .விஷயமா?நீங்களே யோசியுங்கள். மக்கட்தொகை கணக்கெடுப்பு நாள் என்று தெரிந்ததும் இது பற்றி எழுத வேண்டும் என தோன்றியது. எழுதிவிட்டேன்.பெண்ணாகிய எனக்கு இது ஒரு பெரிய கடமை என்று நினைக்கிறென். பின் குறிப்பு: இது என் முதல் பிரசவம் ( முதல் இடுகை).. தவறு இருப்பின் மன்னிக்க!
Friday, June 17, 2011
நீலநிறம்
வானம் நீலநிறம் .................... ஆழ்கடலும் நீலநிறம் ................... பெண்ணின் விழியும் நீலநிறம் ................. கவிஞனின் கற்பனையில் ....... ஏன் ??? அவையும் நீர் ஏந்தி நிற்பதாலா ????
பற்றற்ற வாழ்வு
தாமரைஇலைமேல் தண்ணீரைப் போல என்பது பற்றற்ற வாழ்வுக்கு உதாரணம் .......,ஆனால் தாமரைஇலைமேல் தண்ணீரைப் பார்த்தால் பற்று ஏற்படுகிறதே அதன் அழகின்மேல்......!
Subscribe to:
Posts (Atom)