மழை வரும் போது சிலுசிலுப்பான காற்றடிக்கும். அதில் லேசான குளிரிருக்கும். மழை கொட்டும்போது அதில் நனைந்து விளையாடினால் ஒரு விளையாட்டுத்தனமான த்ரில் இருக்கும் .இந்த த்ரில் சிலிர்ப்பு எல்லாமே அந்த நிமிடத்தோடு முடிந்து விடும். சின்ன வயதிலே ஓடி பிடித்து கண்ணாம்பூச்சி விளையாடற சினேகமெல்லாம் இதைப்போல பாதிப்பை ஏற்படுத்தாத ஒன்றுதான். என்னைப்பொறுத்தவரையில் சினேகம் என்பது இதைவிட அதிகமானது.முக்கியமானது. நட்புக்கு பின்னால் பிறப்பது பரவசம். அம்மா என்று குரல் கொடுக்கும் போது அடிவயிற்றிலிருந்து பீரிட்டெழும் ஆழமான பாச உணர்வு இருக்கிறதே , என்னைப்பொறுத்தவரையில் நட்பில் ஏற்படும் உணர்வும் இது போன்றதே! நீ சந்தோஷ ப்பட்டால் அந்த பரவச உணர்வு என் மனதில் , உடலில் ஓடும் இரத்தத்தில் சூடாகப் பரவுகிறது........நீ அழுதால் அதே இரத்தம் .... எனக்குள்ளிருந்து வலியோடு பீறிடுகிறது. உன்னிடமிருந்து பிறக்கும் ஒலிக்கு என்னுள் எதிரொலி எழுவது எனக்கு புரிகிறது....... எங்கள் நட்பு வயது வரம்பையெல்லாம் மீறிய மனத்தால் ஒன்று பட்ட ஒரு நட்பு.
No comments:
Post a Comment