கவிதை எழுத நேரமில்லை ; வார்த்தை தாளில் விழவும் இல்லை நெஞ்சம் முழுதும் கனக்கும் பாரம்; விழியின் ஓரம் நிற்கும் ஈரம்; ஆறுதல் சொல்ல யாரும் இல்லை; ஆதரவாய் சாய ஒரு தோளும் இல்லை; அழுது விட்டால் கரையும் சோகம்; அழுவதற்கு இங்கே ஏது நேரம் ?