சிலவற்றை சிலரிடம் மட்டும் தான் பேசமுடியும். ஆனால் ....... இவனிடம் எதைப்பற்றியும் எப்போது வேண்டுமானாலும்! எனக்காக சிரிப்பதற்கு மட்டும் அல்ல, அழுவதற்கும் இவனுக்கு தெரியும்!! சோர்ந்திருக்கையில் சொடக்கு எடுப்பதற்கும், தாழ்ந்திருக்கையில் தடைகளை களைவதற்கும், தவறி நடக்கையில் இழுத்து அறைவதற்கும் இவனுக்கு மட்டுமே ஆசை இருக்கும்!!! நடக்கும் போது கால்களாகவும், தூங்கும்போது தலையணையாகவும், சோகப்படும்போது சுகமாகவும், குளிர்படும்போது கதகதப்பாகவும் உருமாற...... உருமாற இவனால் மட்டுமே இயலும்!!! என்னால் இரவுகளையும் இன்பங்களையும் இழந்து வாழ முடியும். உறவுகளையும் வரவுகளையும் மறந்து வாழ முடியும். ஆனால் ........ தோளுக்கு தோள் கொடுத்து தோல்விகளைத் துவளச் செய்யும் இவன்.... இந்த தோழன் இல்லாமல் வாழ முடியாது!!! -கௌதம்.
No comments:
Post a Comment