Friday, July 15, 2011
மனித நேயம்
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றில் பார்த்த ஓர் செய்தி. தமிழகத்தில் ஒரு பெரிய நகரத்தில் ஒரு மனிதனை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவன் மீது மோதிஅவனை கீழே தள்ளி பின் அங்கிருந்த கல்லையும் எடுத்து அவன் தலை மேல் போட்டு கொல்ல முயற்சித்திருக்கின்றனர். இதனை போலீஸ் கண்ட்ரோல் அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர் போலீஸ். பிறகு போலீஸ் அங்கு சென்று அந்த மனிதனை மருத்துவமனை எடுத்து சென்றிருக்கின்றனர்.அங்கு அவன் இறந்து விட்டான் என்பது லேட்டஸ்ட் செய்தி. இத்தனைக்கும் அந்த சம்பவம் நடந்தது மக்கள்நெருக்கம் நிறைந்த ஓர் ப்ரதான சாலை.பல வண்டிகள் நின்று செல்லக்கூடிய ஒரு சிக்னல் வேறு.அங்கு சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த சிலர் இதனை சினிமா படபிடிப்பு போல வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்கின்றனர். சிலர் எதையுமே கண்டுக்கொள்ளாமல் தங்கள் வழியே போய்க்கொண்டிருக்கின்றனர். என்னதான் பயம் என்றாலும்,போலீஸ் ,கேஸ் என்று தொல்லை வரும் என்று நினைத்தலும் ஒரு மனிதனை சாகும்படி அடித்துக்கொண்டிருக்கும் போது தடுக்ககூடவா தோன்றாது! சக மனிதன் என்ற உணர்வு கூடவா செத்து விட்டது மக்களுக்கு? வாய் கிழிய பேசுகிறாயே நீயாக இருந்தாலும் அந்த இடத்தில் அப்படித்தான் நடந்துக்கொண்டிருப்பாய் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. அனால் அத்தனை மனிதர்கள் நிறைந்த அந்த இடத்தில் ஒரு தைரியசாலி கூடவா இருக்கமாட்டான்?திரைப்படத்தில் மட்டும்தான் இது போன்ற காட்சியில் கூட்டத்திலிருந்து ஒரு ஹீரோ வந்து காப்பாற்றுவானா? கேள்வி மனதை குடைந்துக்கொண்டே இருக்கிறது. மனித நேயம் என்ற தலைப்பிட்டுவிட்டு மனிதனேயமற்ற செய்தியை விமர்சிக்கின்றாயே என் கிறீர்களா ? அடுத்து மனிதநேயம் மிகுந்த ஓர் செய்தி. ஹவுராவிலிருந்து டெல்லி சென்றுக்கொண்டிருந்த விரைவு ரயில் விபத்துக்குள்ளானது அனைவரும் அறிந்ததே. அப்படி விபத்து நடந்ததும் அருகில் இருந்த கிராமத்து மக்கள் ஓடி வந்து உதவி செய்ததும் அதிலும் ஓர் ஆசிரியர் அங்கு வந்து மீட்பு பணியினருடன் சேர்ந்து பலருக்கு வுதவியதும் அவர்கள் உடமைகளை தேடி அவர்களிடம் ஒப்படைத்ததும் மன நேகிழ்ச்சிக்கான செய்தியாக எனக்கு தோன்றியது. இந்த மனிதநேயம் தான் சக மனிதனிடம் நாம் எதிர்பார்ப்பது.இதுபோல சிலர் இருப்பதால்தானோ என்னவோ இன்னும் மழை பெய்துக்கொண்டிருக்கிறது!!!! பி. கு. பழைய செய்திக்கு என்ன புதிய விமர்சனம் என்று கேட்கிறீர்களா? செய்தியை விட அதிலிருக்கும் கருத்தை பாருங்கள்.
Labels:
செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment