நேற்று பெய்தமழையில் இன்று முளைத்த காளான் என்பது சொல் வழக்கு ........ நேற்று பெய்த மழையில் இன்று எனக்குள் உதிக்கும் கவிதைக்காளான் இது என் வழக்கு ..........
Monday, May 30, 2011
தாமரை
சூரியனை பார்த்து முகம் மலரும் தாமரை மழைத்துளியையும் முகம் மலர்ந்து உள்வாங்கிக்கொள்கிறதே!! ------------ தாமரை மகளின் இதழோரம் மழைத்துளியின் ஈரம் .......... -------------- தாமரை மகள் தலைகவிழ்கிளாளே அது நாணத்தாலா அன்றி மழை நீர் மேலே விழுந்த வேகத்தாலா!!!
Friday, May 27, 2011
மழை
மழைத்துளி.......பூமகளுக்கு
ஆகாயம் தூவும் அர்ச்சனை பூக்கள்!!
மழை இயற்கையோடு இணையும் அழகே அழகு!! மழை......மலை மேல் விழுந்தால் அழகு! மழை......மரம்மேல்விழுந்தால் அழகு! மழை......மலர் மேல் விழுந்தால் அழகு! மழை....... மலரும் மொட்டின் மேல்விழுந்தாலும் அழகே....... அழகு! மழையை இயற்கை ரசித்து தன் மடி ஏந்துகிறது ஏன் மனிதன் மட்டும் பயந்து குடை கீழ் ஒளிகின்ரான்? கொட்டித் தீர்த்தமழை, விட்ட மறுநாள் காலை! மரங்களின் இலைகளில் மழைநீரின் மிச்சம்! மண் மீது விழுந்த தண்ணீரின் சொச்சம்! பசும் புல்நுனிமேல் கிரீடமாய் மழைத்துளி! அதன் மேல்சூரியன் சேர்க்கும் நிறகலவை ஒளிதுளி!

Thursday, May 26, 2011
அம்மாவின் அக்கறை
கொட்டும்மழையில் நனைந்து வெட்டும் மின்னல் பார்த்து குமுறும் இடியை ரசித்து . வீட்டிற்கு வந்தால் திட்டும் அம்மா ......... மழையில் நனைந்தால் காய்ச்சல் வருமென ...அக்கறையான அம்மா!!
சரக்கொன்றை
யாரது அந்த சரக்கொன்றை மரத்தில் அத்தனை சொர்ண ஆரங்களை தொங்கவிட்டது ? ஓ................அத்தனையும் மஞ்சள் சரக்கொன்றை மலர்களோ!!!
Tuesday, May 24, 2011
கோடை மழை
கோடை மழையில்
விழும் துளியில்
சிலிர்த்தெழுகிறது
குளத்தில் இருக்கும் ஆவிகள்
நீராவியாய் !!!
விழும் துளியில்
சிலிர்த்தெழுகிறது
குளத்தில் இருக்கும் ஆவிகள்
நீராவியாய் !!!
Subscribe to:
Posts (Atom)